
கந்த சஷ்டி கவசத்தையும், முருகப்பெருமானையும் இழிவுபடுத்தி யூ-டியுப் சேனலில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டத்தை சார்ந்த செந்தில்வாசனை காவல் அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர் திமுகவை சேர்ந்தவர் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அவர் திமுக ஐடி விங் மாநில செயலாளர் பி.டி.பழனிவேல் தியாகராஜனுடன் இருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இருந்த போதிலும் அதனை மறுத்து கறுப்பர் கூட்டம் அமைப்புக்கு திமுக ஆதரவு என பொய் பிரசாரம் செய்வதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாகவும் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காவல் அதிகாரிகள் விசாரணையின் போது செந்தில்வாசன் திமுக ஐடி விங் பணியாளர் என்பது தெரிய வந்துள்ளது. ஆண்டாள் முதல் அறுபடைமுருகன் வரை இழிவு செய்து இந்துக்களின் திருமண சடங்குகளை இழித்து பழித்து பேசிய கரும் சிவப்பு கூட்டம் தான் இந்த “கறுப்பர் கூட்டம்” என்பது தெள்ளத்தெளிவாக உலகுக்கு வெளிச்சமாகி உள்ளது.