
கொரோனா வைரஸ் நொய் அச்சுறுத்தல் காரணமாக சென்ற மார்ச் மாதம் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.

இதனால் கல்லூரி செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து வந்தது. இன்நிலையில் முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. மேலும், கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அக்குழு தங்களுடைய பரிந்துரையை அரசுக்கு தெரிவித்துள்ளது.
