
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் வயது 37, இவரது மனைவி சுகாசினி வயது 34, இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும் உள்ளார். ராம்குமார் திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் குடியிருந்தார். மேலும், அதே பகுதியில் உள்ள தனியார் கம்பனியில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், சென்ற புதன்கிழமை மாலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தாராபுரத்தில் உள்ள தனது தந்தையை அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், மகனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு அலைபேசி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
அதன் பிறகு பேஸ்புக் பக்கத்தில் நேரடி விடியோவை ஆன் செய்த ராம்குமார் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த அவரது நண்பர்கள் அவரது மனைவிக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சுகாசினி வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இத்னை குறித்து அனுப்பர்பாளையம் போலிஸ் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினர். இதில், தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும், இந்த மானம்கெட்ட உலகத்தில் இனி வாழ எனக்கு விருப்பம் இல்லை எனவும் எழுதி வைத்துள்ளது தெரியவந்தது.
மேலும், ராம்குமார் குடித்தியிருந்ததும் காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.