
இந்தியா அமெரிக்காவுடன் இராஜாங்க ரீதியாக நெருக்கம் காட்டி வரும் இந்த நிலையில், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை தற்சமாயம் சீனா நேரடியாக விமர்சனம் செய்து வருகிறது. இந்தியாவின் இராஜாங்க உறவுகளை பார்த்து சீனா நடுங்கி போய் உள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த எலலை பகுதியான லடாக் மோதலில் இந்தியாவின் கை எப்போதும் ஓங்கி இருப்பதற்கு காரணம், இந்தியாவின் அதிதீவிரமான இராஜாங்க கொள்கையால்தான். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இரஷ்யா, இங்கிலாந்து என்று உலக சாம்ராஜ்யங்களை எல்லாம் இந்தியா தனது பங்காளியாக்கி கொண்டது.

இதனால்தான் இந்திய எல்லையில் அத்துமீறிய சீனாவும் கூட, தற்போது பின்வாங்கி வாலை சுருட்டி உள்ளது. சீனா, இந்திய எல்லையில் எதுவும் செய்வதற்கு முன் தயக்கம் காட்டுவதற்கு காரணம், இந்தியாவின் இந்த இராஜாங்க ரீதியிலான அணுகுமுறைகள்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
+1
+1
+1
+1
+1
+1
+1