அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனறு கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றியுள்ள புரநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 35 டிகிரி சென்றிகிரேற்றும், குறைந்தபட்சமாக 27 டிகிரி சென்றிகிரேற்றும் வெப்பநிலை பதிவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை 23ஆம் தேதி நீலகிரி, தர்மபுரி, சேலம், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்கோனாவில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.