
இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி இராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் நளினியும் ஒருவர்.
நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 29 ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருவது அனைவரும் தெறிந்த அறிவோம்.

இந்த நிலையில், நளினி சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இதனை குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை. கிடைத்த தகவல்களின் படி, நளினிக்கும் சிறையில் உள்ள சில கைதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட சில மன வேறுபாடுகள் சண்டையாக மாறியுள்ளது.

இந்த சண்டை காரணமாக நளினி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஜெயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளன நளினி, தன்னிடம் இருந்த ஒரு துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

சரியான சமயத்தில் இது ஒரு காவல் அதிகாரியால் பார்க்கப்பட்டு, தற்கொலை முயற்சி முறியடிக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நளினி தன்னை வேலூர் பெண்கள் தனிச்சிறையிலிருந்து புழல் ஜெயிலுக்கு மாற்றக் கோரி பலமுறை சிறை நிர்வாகிகளிடமும் ஜெயில் நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் ஜெயில் நிர்வாகம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனாலும் நளினி மிகுந்த மனவேதனையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நளினியின் வழக்குறைஞர் புகழேந்தியும் இதை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது நளினி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளது இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்கியுள்ளது. நளினிக்கு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பாதுகாப்பு இல்லை என்ற நளினி மற்றும் அவரது வழக்குறைஞர்களின் பேச்சு உண்மையாகியுள்ளது என்று பலர் கருதுக்கள் கூறிவருகின்றனர்.