
சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து இருந்த இந்த நிலையில் தற்போது சீனாவின் மிக முக்கியமான நிறுவனங்களை இந்தியாவின் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறை கவனிக்க ஆரம்பித்துள்ளது.
சீனாவுடன் யுத்தம் நிலவி வரும் இந்த நிலையில் இந்தியாவில் சீனாவின் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான இந்தியாவின் சாதுர்யமான செயல் நகர்வுகள் இது என்று கூறுகிறார்கள் வல்லுனர்கள்.
டிக் டாக், ஷேர் இட், யுசி ஃப்ரவுசர், ஹெலோ, எம்ஐ கம்யூனிட்டி, எக்ஸ்செண்டர் உட்பட 59 செயலிகள் இந்தியாவினுள் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட்ட இந்த அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்து இருந்த இந்த நிலையில் தற்போது சீனாவின் முக்கியமான நிறுவனங்களை இந்தியாவின் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறை கவனிக்க தொடங்கி உள்ளது. அதன்படி சீனாவின் பிஎல்ஏ எனப்படும் (ஃபுபிள் லிபரேஷன் ஆர்மி) ராணுவத்துடன் தொடர்பு உள்ளதாக இந்த நிறுவனங்கள் மீது குற்ற புகார் வைக்கப்பட்டுள்ளது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே இவர்கள் ராணுவத்துடன் தொடர்பில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
சீனாவை சேர்ந்த அலிபாபா, ஹுவாவே உள்ளிட்ட பல நிறுவனங்கள் மீது இதற்கான புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு நிறுவனங்கள் இந்த புகாரில் மாட்டி இருக்கிறது. அலிபாபா, ஹுவாவே, டென்சென்ட், எஸ்ஏஐசி, சிந்தியா ஸ்டீல்ஸ், சிங்சிங் கேத்தி இன்டர்நேஷன், சீனா எலக்ட்ரானிக் டெக்னலாஜி குருப் ஆகிய நிறுவனங்கள் மீது இந்த குற்ற புகார் வைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ராணுவத்துடன் இவர்கள் மிக நெருக்கமாக இருந்ததாகவும், இந்திய உள்பட பல நாடுகளை உளவு பார்த்ததாகவும் இவர்கள் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களை கண்காணிக்கும் முடிவில் இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் உளவுத்துறை களம் இறக்கப்பட்ள்ளது. இதில் முன்னதாக அலிபாபா,டென்சென்ட் நிறுவனங்கள் சீனாவின் ராணுவத்திற்காக சில திட்ட்ங்களை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதாவது சீனாவின் ராணுவத்திற்காக இவர்கள் சில ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த நாட்டு பாதுகாப்பு துறையில் இவர்கள் தீவிர கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் இந்த நிறுவனங்கள் மீது உளவுத்துறை கவனம் செலுத்தி உள்ளது. அதிலும் அலிபாபா நிறுவனம் இந்தியாவினுள் பேடிஎம் , சோமேட்டோ, பிக் பேஸ்கெட், ஸ்நாப்டீல், எஸ்பிரஸ்பெஸ் ஆகிய நிறுவனங்கள் மீது முதலீடும் செய்துள்ளது குறிப்பிடதக்கது.

சீனாவின் இந்த 7 நிறுவனங்களும் எதோ ஒரு வகையில் சீனாவின் ராணுவத்துடன் தொடர்பில் இருந்துள்ளது. ராணுவத்துடன் ஏதோ ஒரு வகையில் ஒப்பந்தங்களை செய்துள்ளது. இந்தியாவில் இருக்கும் இந்த நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க தற்போது இந்தியாவின் மத்திய உளவுத்துறை முடிவு செய்துள்ளது. ஆனால் இவர்கள் மீது நேரடியாக எந்த புகாரும் வைக்கப்படவில்லை என்றாலும் முன்னதாக இந்தியாவில் 5ஜி ஏலத்தில் இருந்து ஹுவாவே நீக்கப்பட்டது சீனாவுக்கும் சீன நிறுவனங்களுக்கும் ஒரு எச்சரிக்கியாகவே பார்க்கப்படுகிறது.
1 comment
I’m very happy to read this. This is the kind of manual that needs to be given and not the random misinformation that is at the other blogs. Appreciate your sharing this best doc.