மஹாரஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஒரு காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அனைத்து காவலரும் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் சில காவலர்கள் அவர்களது குடும்பதினருடன் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அப்படி தனிமைப்படுத்தப்படும்போது அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் ஒருவருக்கு தனது கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால், அவரையும் தன்னுடன் தனிமைப்படுத்த வேண்டும் என மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த பெண் காவலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தபால் துறையில் வேலை பார்த்து வந்த ஒருவரை அழைத்து வந்து கொரோனா தடுப்பு முகாமில் பெண் காவலருடன் தனிமைப்படுத்தினர்.
இதனிடையில், பஜாஜ் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் தனது கணவருக்கும் கொரோனா உள்ளது என கூறி மருத்துவமனை ஊழியர்கள் அழைத்து சென்று உள்ளனர். ஆனால், அவர் பெண் கவலர் ஒருவருடன் கொரோனா தடுப்பு முகாமில் உள்ளார் எனவும், அவரை மீட்டுத்தரவேண்டும் எனவும் புகார் மனு கொண்டுத்தார்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கொரோனா தடுப்பு முகாமில் உள்ள பெண் காவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதை கண்டுபிடித்தனர். மேலும், அவருடன் கொரோனா முகாமில் உள்ள நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதையும், இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் கள்ள காதலில் குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சென்ற ஆண்டு நடந்த ஒரு அரசு நிகழ்ச்சியின் போது பெண் காவருக்கும் அந்த தபால் துறையில் பணி செய்து வந்த நபரும் சந்தித்துள்ளனர் அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
தனது கணவர் பெண் காவலருடன் தனியாக குடும்பம் நடத்தி வந்தது, அந்த நபரின் மனைவிக்கு தற்போது தான் தெரிய வந்ததுள்ளது.
இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்தையடுத்து பெண் காவலரும், அவரது கள்ள காதலனும் வெவ்வேறு கொரோனா தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து இப்போது தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.