அல்லு அர்ஜுன் நடித்த “சரைநோடு” திரைப்படம் யூடியூபில் முப்பது கோடி பார்வைகளை பெற்றுள்ளது. போயபதி சீனு டைரக்ஸனில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் இந்த “சரைநோடு”.

அல்லு அர்ஜுன், ரகுல் ப்ரீத் சிங், கேத்ரின் தெரசா, உள்ளிட்டோர் நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமன் இசையமைத்திருந்த இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இந்தப்படம் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 2017ஆம் ஆண்டு யூடியூபில் வெளியிடப்பட்டது. வெளியானது முதல் இன்று வரை இப்படத்தை முப்பது கோடி தடவை பார்க்கப்பட்டுள்ளது. யூடியூபில் முதன் முறையாக முப்பது கோடி முறை பார்க்கப்பட்ட முதல் இந்தியப் படம் இதுவாகும்.
இதனை கொண்டாடும் வகையில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் #Sஅர்ரைனொடு300Mஇல்லிஒன்Vஇஎவ்ஸ் என்ற காஷ்டேகை டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

அடுத்ததாக சுகுமார் இயக்கத்தில் “புஷ்பா” என்ற படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவருடன், ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்ற செயிதிகளும் வெளியாகியுள்ளது.