1996 முதல் 2012 வரை விளையாடிய ராகுல் டிராவிட், 164 டெஸ்டுகளில் பங்கேற்றுள்ளார். டிராவிடை விடவும் அதிகமான டெஸ்டுகளில் சச்சினும், காலிஸும் விளையாடியுள்ளார்கள். எனினும் இவ்விருவரை விடவும் டிராவிடே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகப் பந்துகளை எதிர்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

200 டெஸ்டுகளில் விளையாடியுள்ள சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 29,437 பந்துகளையும், 166 டெஸ்டுகளில் விளையாடியுள்ள காலிஸ் 28,903 பந்துகளையும் எதிர்கொண்டுள்ளார்கள். ஆனால் இவ்விருவரை விடவும் குறைவான டெஸ்டுகளில் விளையாடிய டிராவிட், தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 31,258 பந்துகளை எதிர்கொண்டு சாதனை படைத்திருகிறார்.

இதுபற்றி ட்வீட்டரில் வெளியிட்டுள்ள ஐசிசி, 31,258 – டெஸ்ட் கிரிக்கெட்டில் மற்ற வீரர்களை விடவும் அதிகப் பந்துகளை எதிர் கொண்டு ஆடியவர் டிராவிட் என கூரியுள்ளனர்.

வேறு எந்த பேட்ஸ்மேனும் 30,000 பந்துகளைக் கூட எதிர்கொண்டதில்லை. ஒவ்வொரு டெஸ்டிலும் 190.6 பந்துகளை டிராவிட் விளையாடியுள்ளார் என்று ஐசிசி அந்த செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது.