தமிழ்நட்டின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக காவலர்கள் கைது செய்தனர்.

இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜர்ப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கடும் அதிர்சியை ஏற்படுத்தியது. விசாரணையின்போது காவலர்கள் இருவரையும் கடுமையாக அடித்ததே அவர்கள் மரணத்திற்கு காரணம் என்ற சந்தேகம் எழுந்தது.
தமிழ்நட்டின் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக காவலர்கள் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜர்ப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கடும் அதிர்சியை ஏற்படுத்தியது. விசாரணையின்போது காவலர்கள் இருவரையும் கடுமையாக அடித்ததே அவர்கள் மரணத்திற்கு காரணம் என்ற சந்தேகம் எழுந்தது.

மேலும் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை கையில் எடுத்த பிறகு, இந்த விவகாரமானது வேகம் எடுத்தது. நீதித்துறை நடுவர் பாரதிதாசனின் விசாரணையை அடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது வழக்கு திசை திரும்பியது. வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதனை தீவிரமாக கண்காணித்தது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் உயர் அதிகாரிகளான இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், மற்றும் தொடர்புடைய காவலர்கள் உள்ளிட்டோர் அரஸ்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்தபடி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ குழுவினர் உடனடியாக டெல்லியிலிருந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். சென்ற் மூன்று நாள்களாக ஜெயராஜ் வீடு, சாத்தான்குளம் காவல் நிலையம், மருத்துவமனை, கோவில்பட்டி ஜெயில் ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று சிபிஐ குழு விசாரணை நடத்தியது. இந்த நிலையில் தந்தை மற்றும் மகன் சந்தேக மரணம் எனப் பதிந்திருப்பதை, கொலை வழக்காக மாற்றி சிபிஐ இப்போது பதிவுசெய்துள்ளது. சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கொலை வழக்காக இந்த சம்பவம் மாற்றபட்டுள்ளது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.