கேரளாவில் சுங்கத்துறையினர் மூலமாக சவூதி அரேபியாவில் இருந்து தலைமை செயலக பேயரில் வந்த பார்சலில் கோல்டு கடத்தி வரப்பட்டுள்ளது. இதனைத்தெரிந்த சுங்கத்துறையினர், விசாரணை மேற்கொண்டு ஸ்வப்னா என்ற பெண்மணி மற்றும் அவளுடன் சேர்ந்த மூன்று கூட்டாளிகளுடன் இந்த கடத்தலை நடத்தி வந்ததாக கண்டறிந்துள்ளனர்.
இததையடுத்து நேற்று இந்த வழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், விசாரணைக்கு பயந்த ஸ்வப்னா தலைமறைவாகியுள்ளார். சென்ற திங்கள் கிழமை காலை பதினோறு மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து பாலோடு வழியாக தமிழகத்திற்கு செல்லும் வழியில் அவள் பயணம் செய்து வந்தது தெரியவந்துள்ளது.
இவர் தமிழ்நாட்டில் உள்ளா செங்கோட்டை என்னும் பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவ்வப்போது போகும் வழியில் மக்களிடம் சரியான வழியில் செல்கிறோமா? என்றும் விசாரித்துள்ளார்.
மேலும், காரில் அவரது குழந்தைகள் இருப்பதாகவும், கடத்தல்காரி என்ற விபரம் அறியாது அவளுக்கு வழி சொன்ன ஒரு பெண்மணி தெரிவித்துள்ளார். இது குறித்த தகவலை தமிழக காவல் துறைக்கும், சோதனை சாவடிகளிலும் பகிரப்பட்டு உதவி கேட்க்கப்பட்டுள்ளதாக கேரள போலிஸ் அதிகாரிகள் மற்றும் சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.