எஸ்.பி.ஐ வங்கி பெயரில் போலி வங்கி கிளை நடத்தியதாக முன்னாள் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியின் மகன் உள்ப்பட மூவரை போலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள எல்.என்.புரம் ஊரைச் சேர்ந்தவர்கள் சையது கலீல் மற்றும் லட்சுமி. முன்னாள் வங்கி ஊழியர்களாக வேலைபார்த்த அவர்களுக்கு கமால்பாபு என்ற ஒரு மகன் உள்ளார். கலீல், சென்ற 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துள்ளார், லட்சுமி, சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வங்கி வேலையில் இருந்து பணி ஓய்வு பெற்றுள்ளார். வேலையில்லாமல் இருந்த அவ்ர் மகன் கமால்பாபு, பாரத ஸ்டேட் பாங்கு – நார்த் பஜார் என்ற பெயரில் போலியாக வங்கிக் கிளையை நடத்தி வந்துள்ளார். மேலும், அந்த பாங்குக்கு தானே மேனேஜர் எனவும் கூறி செயல்பட்டு வந்துள்ளார்.
ஏற்கனவே, அந்த பகுதியில் பாரத ஸ்டேட் பாங்கின் இரு கிளைகள் இருந்ததை அடுத்து, மூன்றாவதாக ஒரு கிளை திறக்கப்பட்டுள்ளதா என கஸ்டமர் ஒருவர் அந்த வங்கியின் பிரான்ச் மேனேஜரிடம் பேசியுள்ளார். அதனை அடுத்து, அன்த மேனேஜர், காவல்துறையினருக்கு இதனை குறித்து தகவல் தெரிவித்துள்ளார், கமால்பாபு நடத்திவந்துள்ள அன்த வங்கி கிளைக்கு சென்றுள்ளார்.
அப்போது, பாரத ஸ்டேட் பாங்கின் பெயரிலேயே போலியாக செலான், செக்புக், முத்திரைகள், கோப்புகள் உள்ளிட்டவை இருந்ததை அவர் பார்த்துள்ளார். மேலும், பாரத ஸ்டேட் பாங்கு – நார்த் பஜார் என்ற பெயரில் போலி வெப்சைட் உருவாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதனை அடுத்து, கமால் பாபு, அவருக்கு உதவிய ஈஸ்வரி ரப்பர் ஸ்டேம்ப் உரிமையாளர் மாணிக்கம், அருணா பிரிண்டர்ஸ் உரிமையாளர் குமார் உள்ளிட்ட மூவரை காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அதில் கைதான மூன்று பேர் மீது மோசடி, திருட்டு முத்திரை உருவாக்குதல், நற்பெயருக்கு பங்கம் எற்படுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பண்ருட்டி காவலர்கள் அறிவித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய மேல் விசாரணையில், சுமாராக மூன்று மாத காலம் அந்த வங்கியை செயல்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.