அமேசான்,ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு பொருட்களுக்குமான சொந்த நாட்டை தங்கள் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே தற்போது ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்சனைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் லடாக் எல்லையில் சென்ற மாத இடையில் ஏற்பட்ட சீனாவின் தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர்; சீன தரப்பிலும் சுமார் 45 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.
இந்த பிரச்சனையைத் தொடர்ந்து,இந்தியாவில் யாரும் சீனப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்ற கோஷங்கள் இந்தியவில் வலுத்துவந்தன.
இந்திய அரசும் கடந்த வாரம் டிக்டாக்,ஹெல்லோ உள்ளிட்ட 59 சீன கைபேசி செயலிகளுக்குத் தடை விதித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்திய அரசு.
இந்த நிலையில்தான்,இந்தியாவில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி அமேசான்,ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் உள்ள ஒவ்வொரு பொருட்களிலும் அதன் சொந்த நாட்டைக் குறிப்பிட வேண்டும்.
வரும் 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 1ஆம் தியதிக்குள் அந்த ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் இச் செயலை செய்து முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவையும் இந்திய அரசு விதித்துள்ளது.
இந்திய அரசின் இந்த முடிவுகளை வரவேற்றுள்ள ஈ-காமர்ஸ் நிறுவனங்கள்,இந்தக் காலக்கெடுவை கொஞ்சம் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஈ-காமர்ஸ் நிறுவனமும் லட்சக்கணக்கான பொருட்களை ஆன்லைன் மூலம் விற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அவற்றில் ஏராளமான சீன நாட்டு தயாரிப்புகளும் உண்டு. இந்திய அரசின் இந்த புதிய முடிவால் ஆன்லைனில் விற்பனையாகும் சீனப் பொருட்களை இந்தியர்கள் புறக்கணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில்,ஆன்லைன் தளங்களில் இந்தியத் தயாரிப்புகளின் விற்பனை பெருகும் என்றும் நம்பப்படுகிறது.
1 comment
Rattling clean web site, thanks for this post.