
பிரேசில் நாட்டு அதிபருக்கு கொரோனா தொற்று ! அதுவெறும் சளிதான் என்று அலட்சியமாக இருந்துள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனாவினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாவது நிலையில் உள்ளது. இதுவரை அந்நாட்டில் 16.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 67,000-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
பிரேசிலில் கொரோனா பரவ ஆரம்பித்ததிலிருந்தே அதனை ஒரு சின்ன காய்ச்சல் என்று அந்த நாட்டு ஜெயிர் பொல்சனோரா கூறி வந்தார்.
அந்நாட்டு சுகாதாரத்துறை எச்சரித்தப்போதும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நடவடிக்கை எடுக்க மறுத்தார். அதற்க்கு மாறாக சுகாதாரத்துறை அமைச்சரை பதவியிலிருந்து நீக்கிவிட்டார்.
மேலும் அவர் சமூக விலகலை பின்பற்றாமலும், பொது இடங்களில் முககவசம் அணியாமலும் கொரோனா விதிகளை பின்பற்றாமல் காற்றில் பறக்கவிட்டடதாக சர்ச்சையில் சிக்கினார் அதிபர்.
இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அதிபர் பொல்சனோரோ தெரிவித்துள்ளார்.

அந்தநாட்டு தலைநகர் பிரேசில்லாவில் உள்ள தனது வீட்டில் இருந்து தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், நேற்று முன் தினம் முதல் தனக்கு உடல்நலக்குறைவாக இருந்தது என்றும்.
அதனைத்தொடர்ந்து தனக்கு உடல் சோர்வும், காய்ச்சலும் இருந்தது என்றும். இதனால் தான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். இப்போது எனது கொரோனா பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன.
அதில் எனக்கு கொரோனா தொற்று நோய் உறுதி ஆகியுள்ளது. அதற்காக ஹைட்ரோகுளோகுயின் மற்றும் அஸித்ரோமைசின் ஆகிய மருந்துகளை எடுத்து வருகிறேன். எனினும் எனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றது. தான் தற்போது நன்றாக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
பிரேசில் அதிபருக்கு ஏற்கனவே மூன்று முறை கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த மூன்று சோதனைகளிலும் அவருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என்ற முடிவுகள் வந்த நிலையில், அவருக்கு தற்போது கொரோன தொற்று நோய் உறுதியாகியுள்ளது தெரியவந்துரிக்கிறது.