
மீன்களுக்கு (Less Fish Bone) நிகரான சத்தான உணவு அசைவத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். கொழி ஆடு என்று எடுத்துக்கொண்டால் கொழுப்பு, இதய நோய் போன்றவை வந்துவிடும். ஆனால் மீன் எந்தவகையாக இருந்தாலும் சரி, மனித உடலுக்கு தீங்கானது அல்ல. இப்படி சத்து மிகுந்த மீன் இனத்தை பார்த்த உடனே எந்தவகை இது? மத்தியா கெளுத்தியா? என அடையாளம் காண்பது எப்படி?.
காலா மீன் – Gala fish

இறைச்சிக்கறி போன்றுதான் இருக்கும் முள்ளே இருக்காது. குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற மீன் வகை இது.
சிலேப்பி மீன் – Silapi fish

வறுப்பதற்கு அருமையான மீன் இது. மேலும் புரதசத்து மிகுந்தது. குளத்து மீன், ஆற்று மீன், கடல் மீன் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை ருச்சியும் ஆரோக்கியமும் நிறைந்தது.
விரால் மீன் – Finger fish

இந்த மீனை பிடிப்பதே மிகவும் கஷ்டம். ஏன் என்றால் தொழிக்கு அடியில் மறைந்து கொள்ளும். மனித உடலுக்கு மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
விலாங்கு மீன் – Eel Fish

மிகவும் உஷாரான மீன். தொழியில் கூட உயிர்வாழும் தன்மையுடையது. பார்பதர்க்கு பாம்பு போலவே இருக்கும். அதன் தோலை உறித்துவிட்டு சமைத்து உண்ண வேண்டும். பிற மற்ற மீன்களை போல் இல்லாமல் இதனது தோலை உறிக்க, விலாங்கு மீனை தரை மண்ணில் போட்டு பொறட்டி எடுக்க வேண்டும்.
கிழங்கு மீன் – Potato fish

இந்த மீனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மனிதனின் மூல வியாதியை கூட குணப்படுத்த இயலும். மனித உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
சார்க் மீன் -SAARC fish

இது கொழுப்பு இல்லாத மீன் வகையை சார்ந்தது. கிட்டத்தட்ட 80 வகை சார்க் மீன்கள் உண்டு. இந்த மீனை மீன் கடையில் வாங்கும் போது, பெண் சார்க் மீனா என்று கேட்டு வாங்கவும்.
சூரை மீன் – Tuna fish

பார்க்க வஞ்சர மீன மாதிரியே இருக்கும். இந்த மீனின் செவுளை கொண்டு சூரை மீனை எளிதில் கண்டுபிடித்து விடலாம். அதிக புரதசத்து மிகுந்த மீன் இது.
நெத்திலி மீன் – Anchovy Fish

சளி தொல்லைக்கு இந்த மீன் மிகவும் உகந்தது என்பார்கள். சுண்ணாம்பு சத்து மிகுந்த மீன் இது. எண்ணெயில் பொறித்து எடுத்தால் இந்த மீனின் டேஸ்ட் அருமையாக இருக்கும். இதன் நிஜ பெயர் நெய்த்தோல். இதுவே நாளடைவில் நெத்தலி என மாருவியது.
கானாங்கெளுத்தி மீன் – Kanang catfish

இந்த மீனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் மன அழுத்தத்திற்குள் ஆளாகாமல் நீண்டனாள் உயிர் வாழ இயலும்.
மத்தி சாளை மீன் – Herringbone fish

இதை ஏழைகளின் மீன் என்றே கூறலாம். மனித நரம்பு மண்டலத்திற்கு மிகவும் அற்புதமான மீன் இது.
பாறை மீன் – Reef fish

இந்த மீனை பட்ஜெட் மீன் என்று கூட கூறுவார்கள். மற்ற மீன்களை விட மிகக்குறைவான விலையில் கிடைக்கும். ஆனால் சுவையில் எனைய மீனக்ளுக்கு நிகராகவே காணப்படும்.
வஞ்சிர மீன் – Chain fish

வஞ்சர மீனா என்பார்கள்? இதை சாப்பிட ஆசைப்பட்டால், வங்கியில் கடன் வாங்கி தான் சாப்பிடணும் என்பார்கள் அந்த அளவிற்கு இதன் விலை அதிகம்! ஆனால் இதன் டேஸ்ட்க்கு முன்னால் பணம் எல்லாம் பெரிய விஷயமே இல்லை.