சில நாள்களுக்கு முன் 59 சீனாவின் ஆப் – களை இந்திய அரசு தடை செய்து நீக்கியது. இதில் பிரபல பொழுதுபோக்கு ஆப் – களான டிக்டாக் மற்றும் ஹலோ – வும் அடங்கும். இந்த டிக்டாக்கின் மூலம் வெளி உலகங்களுக்கு பல பேர் அறிமுகமாகினர்.
இவற்றில், ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டம், துக்கம், சந்தோஷம் என தற்கொலை முயற்சி வரை சென்று மீண்டு வந்தவர்கள் ஏராளம். அதேபோல், டிக்டாக் மட்டும் இல்லையென்றால், இவர்கள் எல்லாம் அவ்வளவு வெளியுலக ஃபேமஸ் ஆகியிருப்பார்களா என்றுகூட தெரியாது.
இதனால் இதை பற்றி டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா தனது கருத்துக்களை சொல்லும் போது நம்ம இந்திய திரு நாட்டுக்காக தடை பண்ணப்பட்ட டிக்டாக்கால் தனக்கு மிகவும் மகிழ்ச்சி தான் என்று கூறீயுள்ளார். அந்த வகையில், எளிய, யதார்த்த பேச்சால் மக்களை ஈர்த்தவர் டிக்டாக் புகழ் ஜி பி முத்து.
ஜி பி முத்துவை பொறுத்தவரை, தன்னுடைய மரக்கடை வேலை இவருக்கு இரண்டாவது
தான். அவருக்கு முதலில் டிக்டாக் தான். அந்த டிக்டாக்கு ஒளிப்பதிவுகளையும் தனது மரக்கடையில் வைத்து தான் எடுப்பார். உணவு சாப்பிடுவது முதல், தூங்குவது என்று ஒவ்வொரு செயலையும் டிக்டாக் போட்டு வந்த இவர் தற்சமயம் சோகமே வடிவாக காணப்பட்டுள்ளார்.
மேலும் இப்போது டிக்டாக் தடை குறித்து ஒரு காணொளியை வெளியிட்டு அதில் பாரத பிரதமருக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். அதில் அவர் பேசியுள்ளதாவது
இந்த பதிவு யாருக்குன்னா, இந்திய நாட்டின் பிரதமர் ஐயா மோடி அவர்களே, நான் சொல்றேன் கேளுங்க.
இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க எனக்கு மனநிலை சரியில்லாமல் போயிட்டு இருக்கு. என்னன்னே தெரியல, எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. எப்படியாவது இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க. ஒன்னுமே சரியல்லை பார்த்துக்கிடுங்க!!!. ஐயா மோடி அவர்களே உங்களை தாழ்மையா வேண்டி கேட்டுக்கிறேன் என்று சோகத்துடன் அழுது புலம்பி உள்ளர் தமிழ் நாட்டு டிக்டாக் புகழ் ஜி பி முத்து.
2 comments
Ha Ha
டிக்டாக் புகழ் ஜி பி முத்து வாழ்க!!!!!!!!!!!!!!!!