திடீரென பிரதமர் நரேந்திர மோடி நேற்று இந்திய எல்லையான லடாக்கிற்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்தார். அப்போது அந்த நிகழ்வில் பேசிய மோடி எல்லை விரிவாக்க காலம் எல்லாம் முடிந்து விட்டது இனி நமது வளர்ச்சிக்கான காலம்தான் என்று பேசியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்தப் உரையாடலை சீனா எதிர்த்து சீனாவுக்கு எதிராக ராஜாங்க உறவுகளில் தப்பு கணக்கு போட வேண்டாம் என்றும் எல்லை விரிவாக்கம் பற்றிய மோடியின் பேச்சைக் குறித்து இது எடுத்துக்கட்டப்பட்ட அல்லது மிகைப்படுத்தப்பட்ட பேச்சு என்றும் எச்சரித்துள்ளது.
நீயூடெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜிரோங் இதைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, தமது 14 அண்டை நாடுகளுடனான எல்லையில் 12 நாடுகளில் எல்லையை சீனா அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே தீர்த்ததாகவும் சில எல்லைகளை நட்பு ரீதியிலான ஒற்றுமை மற்றும் இணைப்புகளாக மாற்றி உள்ளதாகவும், ஆகவே எல்லை விரிவாக்கத்திற்காக சீனா முயற்சிப்பதாகக் கூறுவது என்பது அதிமிகைப்படுத்தப்பட்ட பேச்சு என்றும் எச்சரித்துள்ளார்.
இதேபோல், சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சர் ஷாவோலிஜியன் பேசும்போது, சீனாவுக்கு எதிரான தப்பான கணக்குகளைப் போட வேண்டாம் என்றும், இரு நாட்டு தலைவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா முக்கியமாக பின்பற்றும் என்று நாங்கள் நம்புவதாகவும், இரு நாடுகளும் சேர்ந்து இந்திய எல்லையில் அமைதியை ஏற்படுத்த முயற்சிப்பதே நன்மை என்றும், மேலும் இந்தியாவும் சீனாவும் பெரிய வளரும் நாடுகள் என்னும் பட்சத்தில் நாட்டின் வளர்ச்சி மற்றும் புத்துருவாக்கம் என்கிற வேலைகளில் இருநாடுகளும் இருப்பது போன்று இருநாட்டு உறவுகளையும் பாதிக்கிற வகையன பொருளாதார விவகாரத்தில் சமீபத்திய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவது நன்மையற்றது என்றும் அறிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய அவர் இரண்டு தரப்பு உறவுகளை செழுமை படுத்தும் விதமாக இருநாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த ஒத்துழைப்புக்கு இடையிலான செயற்கையான முட்டுக்கட்டைகள் மூலமாக, உலக அமைப்பின் விதிமுறைகளை இந்தியா மீறுவது இந்தியாவின் நன்மைகளை பாதிக்கும் என்றும், சீன வர்த்தகங்களின் உண்மையான உரிமைகளை பாதுகாக்க சீனா அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்திய எல்லையில் இந்தியா சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கி விட்டதாகவும் சீனாவும் இந்தியாவும் ராணுவம் மற்றும் இராஜாங்க வழிகளின் மூலமாக இணைப்பில் இருக்கும் நாடுகள் என்றும் இரு நாடுகளுமே எல்லையில், சூழ்நிலையை சிக்கலாகும் விதமாக நடந்து கொள்வது அர்த்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.