சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சர் வாங்யீ மற்றும் பாக்கிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா மெஹ்மூத்குரேஷி ஆகியோர் டெலிபோனில் உரையாடியதாக இரண்டு நாட்டு வெளியுறவுதுறை அமைச்சக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பாக் வெளியுறவுதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் போர் தந்திரம் மற்றும் எல்லை விரிவாக்கக் கொள்கைகள் நம் இரு நட்டின் அமைதிக்கு பாதிப்பு விளைவிப்பதாகவும் பிராந்திய எல்லை பாதுகாப்பு சூழ்நிலைகள் சரிவடைந்து வருவதாகவும் பாக் வெளியுறவுதுறை அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார், மேலும் இவர் சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சரிடம் மனித உரிமைகள் மீறல் மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் இந்தியா அத்துமீறி வருவதாகவும் சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சரிடம் தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.
சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சக செய்திகள் குறிப்பில், சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங்யீ சீனா மற்றும் பாகிஸ்தான் இருநாடுகளும் இந்தியவால் பெரும் சவால்களையும் இடர்பாடுகளையும் சந்தித்து. எல்லை பாதுகாப்புக்காக இருவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார். நீண்ட காலமாக இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவி மற்றும் இணக்கம் காட்டி வருகின்றனது. இரண்டு நாடுகள் தொடர்பான முக்கியமான நலன்களை குறித்து உறுதியாக இருதரப்பினரும் நின்று பரஸ்பர ஆதரவு அளித்து வந்துள்ளதாகவும் இருநாடுகளும் உண்மையான நம்பகமான பங்காளிகள் என்றும், காஷ்மீர் மற்றும் ஆப்கான், தெற்காசிய னாடுகளின் நிலவரங்களின் பலதரப்பட்ட நிகழ்வுகளை இரு தரப்பினரும் பேசினார்கள் என்று சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி உரையாடல் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷிக்கு கரோனா பதிப்பு என்று உறுதியான பிறகு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியா,சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் மற்றும் அதன் பிறகான வார்த்தைப் பரிமாற்றங்களில் மோசமான மோதல் நிலவும் இந்த சமயத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர்கள் இந்த தொலைபேசி உரையாடலை நடத்தியுள்ளனர் எனபது குறிப்பிடதக்கது.
இந்தியாவின் பதிலடி:
பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிகளில் இந்தியப் படைகள் அத்து மீறுவதாக பாக்கிஸ்தானின் புகார் குறித்து இந்திய அரசு தரப்பில் கூறும்போது, இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் தான் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றது. 2003 ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தங்களை பாக்கிஸ்தான் மீறிவருகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 2432 முறை பாகிஸ்தான், இந்திய பாக்கிஸ்தன் எல்லை உடன்படிக்கைகளை மீறி அத்துமீறல்களில் ஈடுபட்டதில் 14 இந்திய ரானுவ வீரர்கள் கொல்லப்பட்டு 88 ரானுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஐநா-வின் மனித உரிமைகள் குழு அமர்வில் ஹாங்காங் விவகாரங்கள் குறித்து இந்தியா கவலை வெளியிட்ட விவரத்தையும் சீனா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர்கள் இந்தத் போன் உரையாடலில் விவாதித்துள்ளனர்.
ஆனால் பாக்கிஸ்தான் அரசு ‘ஒன் சீனா’ கொள்கையை ஆதரிப்பதாகவும் ஹாங்காங் மட்டுமல்லாமல், தைவான், திபெத், ஷின்ஜியாங் ஆகியநாடுகளை ஆக்கிரமிக்க சீனாவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.