K. Muthukumar was an Indian journalist and activist based in the province of Tamil Nadu
Who came into prominence when he set himself on fire protesting against the brutal atrocities against the Sri Lankan Tamil people at the peak of civil war in the country.
His death instantly triggered widespread strikes, demonstrations and public unrest in the state, most notably the manifestation of popular defiance of the Government of India ban against the Liberation Tigers of Tamil Eelam.
Which the people demonstrated carrying flags of Tamil Eelam, placards and images of the LTTE leader V. Prabhakaran in the funeral procession of Muthukumar. Subsequently, 6 more Tamils committed selfimmolation in various parts of the globe including India, Malaysia and Switzerland.
On 29 January 2009, Muthukumar doused himself with several liters of petrol, and set himself on fire opposite the state Congress headquarters in Shastri Bhavan, Chennai. Just before his death, he flung several copies of his eight-page note in which he protested the Indian government’s war in Sri Lanka against the Tamils. With 95% burn injuries, he was rushed to the Kilpauk Medical College in a critical condition, with slim chances of survival. He succumbed within a short span of time.
The 11th anniversary of Muthukumar, who died on the same day in 2009, is observed today.
Muthukumar set himself on fire by urging the Sri Lankan government to stop the Tamil people in Sri Lanka.
Many people are worshiping Muthukumar at the Nivenandal event in Chennai.
கு. முத்துக்குமார் (K. Muthukumar)(இறப்பு: சனவரி 29, 2009, அகவை 28) ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதாக, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக்கொண்டவர் ஆவார். இவர் சென்னையில் பெண்ணே நீ இதழுக்குப் பத்திரிகையாளராக வேலை செய்து வந்தவர். அதற்கு முன்னர் உதவி இயக்குநர் ஆகவும் வேலை செய்தவர்.
தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு சனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி மண்எண்ணெயை உடலில் ஊற்றித் தீயை பற்ற வைத்தார். அவர் கையிலிருந்த ஈழத்தமிழரின் போராட்டத்திற்கன பிரசுரங்கள் காற்றில் பறந்தன. உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமரன் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார். அவர்மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரைக் காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி இறந்தார்.
இறக்கும் முன்பு முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். ஒன்றிய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களைத் திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் ஒன்றிய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
கு.முத்துக்குமாரின் மரணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தமிழகம் முழுக்க மாணவர்கள், பெண்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்குரைஞர் எனப் பொதுமக்கள் அலை அலையாய் திரண்டு தங்கள் உணர்வுகளை வீரமரணத்தை ஒட்டி வெளிப்படுத்தினர். சேலத்தில் அனைத்து அமைப்பினரும் சேர்ந்து 30.01.2009 நடத்திய வீர வணக்க ஊர்வலம் மாலை 4 மணிக்கு அஸ்தம்பட்டியில் தொடங்கி ஊர்வலம் பழைய பேருந்து நிலையத்தில் முடிந்தது.
கடந்த 2009-ஆம் ஆண்டு இதேநாளில் மரணித்த முத்துக்குமாரின் 11-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2009-ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள அரசு நடத்திய தமிழினப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தி, முத்துக்குமார் தன்னைத் தானே தீயிட்டுக்கொண்டு உயிர்நீத்தார்.
சென்னையில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.