சென்னையின் ஒரு மாட துளசி மரத்தில் இந்த அதிசய பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் என்னவென்று தற்போது கண்டறியப்படவில்லை. இது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட பூச்சி இனமா அல்லது முற்றிலும் வேறு ஒரு இனமா என்று விஞ்ஞானிகள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் உள்ளது. விஷம் உள்ளதா இல்லையா என்று இன்னும் தெரியவில்லை. பார்ப்பதற்கு வெட்டுக்கிளி போன்று இருக்கிறது அதனால் ஒருவேளை இது வெட்டுக்கிளியின் இனத்தை சேர்ந்த பூச்சியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த பூச்சி புதிய இனமாக இருந்தால் அது நமது நாட்டிற்கு அதை கண்டு பிடித்தவர்கள் மீதும் ஒரு மிகப்பெரிய கவுரவமாக இருக்கும். இது துளசி இலைகள் மற்றும் அதை சார்ந்து உள்ள செடி தளைகளை உண்டு வாழ்கிறது. இது மஞ்சள் பச்சை கருப்பு, நீலம் மற்றும் செம்மண் கலர்கள் கலந்து காணப்படுகிறது. பார்ப்பதற்கு வெட்டுகிளி போன்றும் அதன் நிறங்கள் பஞ்சவர்ணக்கிளி போந்றும் இருப்பதால் இதற்கு பஞ்சவர்ண வெட்டுக்கிளி என்று நாங்கள் பெயர் சூட்டியுள்ளோம். இது இந்த துளசி மரத்தில் பல நாட்களாக உள்ளது. தற்போது இதை வீடியோவாக தயாரித்து உங்களுக்கு சமர்ப்பித்து உள்ளோம். நீங்களும் இதன் அழகை கண்டு ரசியுங்கள்.
New species discovered.