பெண்களின் பருவ நோய்களை குணப்படுத்துவது எப்படி? | How to cure puberty disease in Women?
குமரிப் பெண்களுக்கு வரும் எல்லா விதமான பருவ நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்ற பெயரும் உண்டு ஆங்கிலத்தில் இதை ஆலோவேரா என்று அழைப்பார்கள்.
Aloe vera cures all kinds of puberty and adolescent diseases that come to women. So it is also called Kumari katralai in tamil.
பெண்களின் பருவ நோய்களை நீக்கும் ஒரு சிறிய ரெசிபியை இப்போது கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கற்றாழை – 1/2 கிலோ
கருப்புக்கட்டி – 1/2 கிலோ
பூண்டு – 150 கிராம்
குமரி கற்றாழையை பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 10 முறை நன்குதண்ணீரில் சுத்தம்செய்ய வேண்டும்,
பிறகு அதன் தண்ணீரை நன்கு வடித்து விட்டு 10 நிமிடம் உலர வைக்கவேண்டும்.
பிறகு அடுப்பில் ஒரு சட்டியை ஏற்றி அந்த சட்டியில் அரைக்கிலோ குமரி கற்றாழை அரை
கிலோ கருப்புகட்டி இரண்டையும் சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் 150 கிராம் தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு
மீண்டும் கிளற வேண்டும்.
பூண்டு வேகும் வரை நன்கு வதக்க வேண்டும் பிறகு சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி அதை நன்கு கடைய வேண்டும்.அது நன்கு அல்வா பதம் வரும் வரை கடைய வேண்டும்.
வந்தவுடன் உங்கள் ரெசிபி ஓவர்.
இந்த குமரி கற்றாழை அல்வாவை காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று
வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களின் பருவ
நோய்களான வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க்
கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும்.
பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்