நாசா, வருகிற 2020-ம் ஆண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு தனது ரோவரை அனுப்பவிருக்கிறது. அதில் அந்நிறுவனம் ஒரு புதுமையான முயற்சியாக பூமியிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் பெயர்களைக் கொண்ட மைக்ரோசிப்பையும் அந்த ரோவருடன் அனுப்பவிருக்கிறது. அதற்கான அழைப்பை வெளியிட்டுள்ளது நாசா
பெயர்களைச் சமர்ப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30, 2019.
https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020/
உங்கள் முதல் பெயரையும் கடைசிப் பெயரையும், நாட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின் தங்கள் அஞ்சல் குறியீடு மற்றும் மின்னஞ்சலை குறிப்பிடுங்கள். பிறகு, ‘Send My Name to Mars’ என்பதைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்கவும். அங்கு உங்களின் மாதிரி போர்டிங் பாஸ் காட்டப்படும். உங்களின் சுய விவரங்களோடு அது இருக்கும். அதைத் தரவிறக்கவோ, அச்சிடவோ செய்யலாம். உங்கள் பெயர் நாசாவுக்கு அனுப்பப்படும்.